தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட 2 படங்கள்
- Saturday, October 2, 2010, 22:15
- செய்தி உலவி, திரையுலகம்
- 238 views
- 2 comments
தீபாவளிக்கு கமல், ரஜினி நடித்த படங்கள் வெளிவரப் போதில்லை என்பது உறுதியாகிவிட்டது. விஜய், அஜித் படங்களும்கூட வெளிவரப் போதில்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.
விக்ரம் நடித்த படமும் இந்த பட்டியலில் இல்லை. இறுதி தகவல்களின்படி, சூர்யா, தனுஷ், சிம்பு நடித்த படங்கள் மட்டுமே தீபாவளிக்கு திரைக்கு வரும் எனத் தெரிகிறது. இதில் சிம்பு படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சூர்யா நடித்த ரத்த சரித்திரம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர்களும் படத்தை வெளியிடும் கிளவுட் நைனும் உறுதி செய்துள்ளது. இப்படத்துடன் போட்டி போடும் இன்னொரு படம் – அதுவும் கிளவுட் நைன் வெளியிடும் படம்தான் – வ குவாட்டர் கட்டிங்.
தீபாவளிப் படங்களில் இந்த இரு படங்களுமே நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அப்போ! இந்த தீபாவளி…. ரசிகர்களுக்கு ஏமாற்றந்தான்!
இனியதமிழ் திரைபட பாடல்கள் MP3 Songs | இனியதமிழ் திரட்டி | முகப்பு பக்கம்
Comments
Powered by Facebook Comments


Pingback: Indli.com
Pingback: www.stringblue.com/iniyatamil