இப்படி இடிக்கிறீர்களே? நல்லா இல்லை – சினேகா

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு ஓட்டல் திறப்பு விழாவுக்காக சினேகா வந்திருந்தார்.

நீல நிறத்தில் சேலையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். கழுத்தில் டாலர் செயின் அணிந்து இருந்தார்.

ஓட்டலை திறந்து விட்டு புறப்பட்டபோது சினேகாவை சுற்றி ரசிகர்கள் முற்றுகையிட்டனர். மொபைல் போன் கேமராவில் படம் பிடித்தார்கள். ஆட்டோ கிராப்பும் வாங்கினார்கள். சினேகா சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

அப்போது பின்னால் நின்ற ரசிகர் ஒருவர் சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதனால் ஆத்திரமான அவர் ரசிகர் மீது ஆவேசப்பட்டார். இப்படி இடிக்கிறீர்களே? நல்லா இல்லை. இனிமேலும் இப்படி செய்தால் சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்தார். நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அந்த வாலிபரை கண்டித்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

முன்னதாக பெருந்துறையில் சினேகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் நடித்த பவானி படம் டிசம்பர் மாதம் வெளியிடுவதாக இயக்குனர் தெரிவித்தார். கூடிய சீக்கிரம் வெளியாகும். தற்போது நடிகர் சரத்குமாருடன் விடியல், பொன்னர்சங்கர், தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் ஒரு படம் என தொடர்ந்து நடித்து கொண்டு இருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

10 வருடமாக கிளாமராக நடிக்கவில்லை. இனிமேலும் கிளாமராக நடிக்க மாட்டேன். எனக்கு பிடித்த நடிகர் கமலஹாசன். நடிகைகளில் ராதிகா. ரஜினி ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு அரசியல் தெரியாது. அதனால் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.

சட்டமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சி பிரச்சாரத்திற்கு அழைத்தாலும் செல்ல மாட்டேன். திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. இப்போது நடிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் நடக்கும் போது நடக்கும். அது காதலா, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையா? என்று பின்னர் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

இனியதமிழ் திரைபட பாடல்கள் MP3 Songs | இனியதமிழ் திரட்டி | முகப்பு பக்கம்

Comments

Powered by Facebook Comments















Copyright © 2012 இனியதமிழ் செய்திகள். All rights reserved. |