சீமான் பக்கம் சாயும் தாணு

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நிதி விஷயத்தில் வைகோவின் முதுகெலும்பாக செயல்பட்டவர் கலைப்புலி எஸ் தாணு. ஆனால் வைகோ தன்னை ஒதுக்கிவிட்டதாக உணர்ந்து, மதிமுகவிலிருந்து சில தினங்களுக்கு முன் விலகிவிட்டார்.

அடுத்து அவர் திமுகவில் சேருவார் என்று பரபரப்பாக ஆரூடம் கூறினார்கள்.

ஆனால் தாணுவின் மனசிலிருக்கும் எண்ணமே வேறு என்கிறார் அவருக்கு நெருக்கமான முக்கியப் புள்ளி.

விஜய்யை வைத்து சீமான் இயக்கும் படத்தைத் தயாரிக்கவிருப்பவர் தாணு. இந்தப் படம் தொடர்பாக தொடர்ந்து சீமானுடன் பேசியதில், அரசியல் ரீதியான அவரது பார்வை தாணுவுக்குப் பிடித்துப் போனதாம்.

‘எந்த லட்சியமும் இல்லாமல் சில எம் எல் ஏ சீட்டுகளுக்காக கட்சிக்குக் கட்சி தாவிக் கொண்டிருப்பதை விட, தமிழர் நலன் என்ற ஒற்றை நோக்கத்துக்காக சிறைக்கு சென்றுள்ள இந்த தம்பிக்கு ஆதரவாக இருப்பதுதான் பெருமை என்று கூறி வந்தாராம் சில நாட்களாய். அதன் விளைவுதான் இந்த விலகல்’ என்கிறார்கள்.

முதல்கட்டமாக, சீமானை சிறையிலிருந்து வெளியே கொண்டுவரும் சட்டப்போரை தீவிரப்படுத்தப் போகிறாராம். சீமான் வந்த பிறகு பெரிய அளவில் நாம் தமிழர் மாநாடு நடத்தி பலம் காட்டுவார் தாணு என்கிறார்கள்.

இனியதமிழ் திரைபட பாடல்கள் MP3 Songs | இனியதமிழ் திரட்டி | முகப்பு பக்கம்

Comments

Powered by Facebook Comments















Copyright © 2012 இனியதமிழ் செய்திகள். All rights reserved. |